| |
|
|
|
|
|
1 பாகம் / PART
1: அறத்துப்பால்:VIRTURE |
|
1.1 பாயிரம்: INTRODUCTION |
1.1.1
கடவுள் வாழ்த்து:
The Praise of God (1-10)
|
|
Kural
1) அகர முதல
எழுத்துஎல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு;
"அ என்னும் ஒலியே உலக மொழிகளிலிலுள்ள
எழுத்துக்கள்
அனைத்திற்கும், மூலமும் முதலும் ஆகும்.
அது போல, உலக உயிர்கள் அனைத்திற்கும், இறைவனே மூலமும்
முதல்வனும் ஆவான்.
A, as its first of
letters, every speech maintains;
The "Primal Deity" is first through all
the world's domains. As all letters have the letter A for their
first, so the world has the eternal God for its first.
|
|
Kural
2)
கற்றதனால் ஆய பயன்என்கொல்? வால்அறிவன்
நல்தாள் தொழாஅர் எனின்.
இறைவன் ஒருவனே, தூய அறிஞனும், நல்ல
பண்பினனும் ஆவான். அறிவையும், பண்பையும் பெறவே, கல்வியைக் கற்கும்
நாம், அத்தகைய பண்புமிக்க இறைவனின் அடிகளைப் பணிந்து போற்றாவிட்டால்,
நாம் கற்ற கல்வியால் எத்தகைய பயனும் இல்லை.
No fruit have men
of all their studied lore,
Save they the 'Purely Wise One's' feet adore.
What Profit have those derived from
learning, who worship not the good feet of Him who is possessed
of pure knowledge ?
|
|
Kural 3)
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நில மிசை நீடுவாழ் வார்.
அன்பு நெஞ்சமே ஆண்டவன் மகிழ்ந்து வாழும் மலர்
மஞ்சம் ஆகும். அத்தகைய நெஞ்ச நேசத்தால், இறைவனின் இனிய திருவடிகளை
என்றும் நினைப்பவரே, இவ்வுலகில் நிலையாக வாழ்பவராவார்.
His feet, 'Who o'er the full-blown
flower hath past,' who gain in bliss long time shall dwell above this earthly plain.
They who are united to the glorious feet
of Him who occupies swiftly the flower of the mind, shall
flourish in the highest of worlds (heaven).
|
|
Kural 4)
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெறுப்புக்களைக் கடந்த
பண்பினையுடைய கடவுளின் பாதங்களை நாளும் தொழுதால், நமக்கும் அப்பண்பு
அரும்பும்: அதன் பலனோ, எத்தகைய துன்பங்களும், நமக்கு எக்காலத்தும்
தோன்றவே மாட்டார்.
His foot, 'Whom
want affects not, irks not grief,' who gain shall not, through every time, of any woes complain.
To those who meditate the feet of Him who
is void of desire or aversion, evil shall never come.
|
|
Kural 5)
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இறைவனின் உண்மையான இயல்புகளை, நாம்
உளமாரப்பாடி வணங்கினால், அறியாமையால் தோன்றும் நல்வினை, தீவினை
என்ற இருவகை வினைகளும், நம்மை வந்து அடையவே மாட்டா!
The men, who on the 'King's' true
praised delight to dwell, affects not them the fruit of deeds done ill or well.
The two-fold deeds that spring from
darkness shall not adhere to those who delight in the true
praise of God.
|
|
Kural 6) பொறிவாயில்
ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ் வார்.
ஐம்பொறிகள் வழியாக் எழும் ஆசைகள் அனைத்தையும்,
அழித்த முதல்வனே ஆண்டவன். அவன் காட்டும் மெய்யான நெறியில், வழுவாமல்
வாழ்பவரே, ஐம்பொறிகளையும் அடக்கி, அழியாத அமரவாழ்வு அடைபவராவர்.
Long live they
blest, who 've stood in path from falsehood freed;
His, 'Who quenched lusts that from the sense-gates five
proceed'.
Those shall long proposer who abide in the
faultless way of Him who has destroyed the five desires of the
senses.
|
|
Kural 7)
தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு
மனக்கவலை மாற்றல் அரிது.
தன்னிகர் அற்ற அத்தலைவனின் பாதங்களைத்
துணையாகப் பற்றியவர்கள் ஒரு போதும் துயர் எய்தமாட்டார்: மற்ற மாதரோ,
என்றும் மனக் கவலையே அடைவர்.
Unless His foot,
'to Whom none can compare,' men gain,
'Tis hard for mind to find relief from anxious pain.
Anxiety of mind cannot be removed, except
from those who are united to the feet of Him who is
incomparable.
|
|
Kural 8) அறாஆழி அந்தணன்
தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறாஆழி நீந்தல் அரிது.
அறக்கடல் ஆவான் ஆண்டவன், அவன் திருவடிகளைத்
தினமும் தொழுதால், இப்ப(பா)வக்கடலை ( பிறப்பை) எளிதில் கடக்கலாம்,
இன்றேல் கடப்பது மிக அரிதாகிவிடும்.
Unless His feet
'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,
'Tis hard the further bank of being's changeful sea to attain.
None can swim the sea of vice, but those
who are united to the feet of that gracious Being who is a sea
of virtue
|
|
Kural 9) கோள்இல் பொறியில்
குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
காணாத கண், கண் அல்ல: கேளாத செவி செவியல்ல:
அதுபோல்,
( மேற்கூறிய) எண்வகைக் குணங்களைக் கொண்ட இறைவனின் தாள்களை, வணங்காத
தலையும் தலையல்ல.
Before His foot,
'the Eight-fold Excellence,' with unbent head, who stands, like palsied sense, is to all living functions dead.
The head that worships not the feet of Him
who is possessed of eight attributes, is as useless as a sense
without the power of sensation.
|
|
kural 10)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பிறப்பும் ஒரு பெருங்கடல்: கடவுள்,
அதைக்கடக்க உதவும், ஒரு தெப்பம். அவர் பாதங்களைப் பற்றியவர்கள்,
அக்கடலை எளிதாகக் கடப்பர்: மற்ற மாதரோ, கலங்கித் தவிப்பர்.
They swim the sea
of births, the 'Monarch's' foot who gain;
None others reach the shore of being's mighty main.
None can swim the great sea of births but
those who are united to the feet of God.
|
|
|
-
-
|
|
-
-
-
-
-
|
|